சுவை மிகுந்த யாழ்ப்பாண ஆனைக்கோட்டை எள்ளுப்பாகு; செய்வது எப்படி!(Video)
ஈழத் தமிழ் மக்கின் பாரம்பரிய உணவுகள் உடலுக்கு மிகவும் சக்தியையும் உடல் நலத்தையும் பேணுவதில் முக்கிய பங்காற்றுகின்றன.
அந்தவகையில் யாழ்ப்பாண, ஒடியல்கூழ் முதல் எள்ளுப்பாகுவரை பல்வேறுபட்ட பணியாரங்கள் என்பன மக்கள் மனதில் இடம்பிடித்த உணவுகளாகும் . இன்னும் பழமை மாறாது சில உணவுகள் பெயர் கேட்டதுமே நம் நாக்கில் எச்சில் ஊறுகின்றது.
ஆம் சிறு கைத்தொழில் பல பெண்களின் வாழ்வாதாரத்திற்கு கைகொடுத்துள்ளது. அந்தவகையில் உள்ளூர் முதல் புலம்பெயர் தேசம்வரை மிகவும் பிரபல்யமான எள்ளுப்பாகு உற்பத்தி செய்வது எப்படி என்பதை மிக அருமையாக விளக்குகின்றார் இதனை கைத்தொழிலாக செய்துவரும் ஆனைக்கோட்டையை சேர்ந்த பெண்மணி.
ஒருகாலத்தில் ஆரோய்க்கியமான உணவுகளை நம்மவகள் உண்டு வந்ததனால் நோய் நொடியின்றி மிகவும் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வந்தனர். ஆவர்கள் ஆயுட்காலமும் அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது அன்னிய உணவுகள் எம் உணவுகளுடன் கலந்ததால் ஆரோக்கியமும் கெட்டு விட்டது என்றல் அது மிகையாகாது.