யாழின் சாதனையாளர் ஒருவருக்கும் மங்கள சமரவீரவிற்கும் இப்படி ஒரு உறவா? பலரும் அறியாத தகவல்
பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்து யாழ்ப்பாணத்தின் சாதனையாளர் 'ஆழிக் குமரன்' ஆனந்தன் மங்களவுக்கு மாமா முறையானவர் என்ற தகவல் பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மங்கள சமரவீரவின் அத்தையின் கணவரே ஆழிக் குமரன் ஆனந்தனின் அப்பா எனவும் கூறப்படுகின்றது. இது தொடர்பில் சமரவீர கூறுகையில், "எனது அம்மாவிடம் துளியும் இனவாதம் இருக்கவில்லை.
சிங்கள - தமிழ் கலப்புத் திருமணங்களுக்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வந்த ஒரு கால கட்டத்தில் எனது தந்தையின் சகோதரி மானெல் வல்வட்டித்துறை தமிழரான வழக்கறிஞர் குமார் ஆனந்தனை மணம் புரிந்தார்.
அவர் உலகப் புகழ் பெற்ற நீச்சல் வீரர். அந்தப் புதிய தம்பதிக்கு முதலில் எங்கள் குடும்பத்தில் இரு கரம் நீட்டி வரவேற்பளித்தவர் எனது அம்மா.
என்னுடைய பல நற்பண்புகளை அவரிடமிருந்தே பெற்றுக்கொண்டதாகவும் மங்கள சமரவீர கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.