யாழ். சித்துபாத்தி மனித புதைகுழியில் இன்று 16 என்புக்கூட்டுத் தொகுதிகள் கண்டுபிடிப்பு
யாழ்ப்பாணம் - செம்மணி, சித்துபாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் மூன்றாவது அமர்வு நேற்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இன்று இரண்டாவது நாளாக அகழ்வுப் பணிகளின் முன்னெடுக்கப்பட்டன.
அதற்கமைய, இன்றைய அகழ்வுப் பணிகளின்போது 16 என்புக்கூட்டுத் தொகுதிகள் வெளிப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது இதனடிப்படையில் இதுவரை வெளிப்பட்ட என்புக்கூடுகளின் எண்ணிக்கை 163 ஆக அதிகரித்துள்ளது.
சிறுவர்களுடையது என சந்தேகிப்படும் என்புக்கூட்டு தொகுதிகளும், ஆடையை ஒத்த துணியும் இன்று வெளிப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி - குருக்கள் மடம் மனிதப் புதைகுழி அகழ்வுக்கு முன்னதான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதுவரையான காலத்துக்கு, குருக்கள் மடம் மனிதப் புதைகுழி பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கும் களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றம் காவல்துறையினருக்கு இன்று உத்தரவிட்டுள்ளது.