யாழில் வீடொன்றில் உயிரிழந்த 17 சிறுமி: விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்!
யாழ்ப்பாண மாவட்டம் கல்வியங்காட்டுப் பகுதியில் வீட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிந்த சிறுமியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் மன அழுத்தம் காரணமாகவே குறித்த சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் முற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், சிறுமி குடும்பத்தினருடன் கதைப்பதை வீட்டு உரிமையாளர் தடுத்ததுடன் பல்வேறு நெருக்கடிகளை வழங்கியதால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகவே குறித்த சிறுமி உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவதுள்ளது.
யாழ் வட்டுக்கோட்டை முதலி கோவிலடியைச் சேர்ந்த கேதீஸ்வரன் தர்மிகா என்கிற 17 வயதான சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான செய்திகள்
யாழில் திடுக்கிடும் சம்பவம்: வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த 17 வயது சிறுமி!