அதிகாரிகள் தொடர்பில் யாழ் வியாபாரிகள் விசனம்!
கடந்த 3 நாட்களுக்கு மேலாக இந்த புதிய சந்தையில் உள்ள குப்பைகள் அனைத்தும் அள்ளப்படாமல் இருக்கின்றது.
இதனால் போக்குவரத்து செய்ய முடியாமல் மிகவும் சிரமமாக உள்ளது என யாழ் நவீன சந்தை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், இங்கு தண்ணீர் வசதியும் ஒரு பிரச்சனையாக உள்ளது.
இது தொடர்பாக முறைப்படும் செய்தும் இதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வரிகள் ,வாடகைகள் என சரியாக வேண்டுகிறார்கள் ஆனால் சொல்லப்பட்ட பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வும் இல்லை.
இந்த பிரச்சனைகளால் சந்தையில் பணி புரிவோர் அத்தனை பேரும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
தினமும் இவ்வாறே நடக்குறது.மோட்டர் பழுது என்கிறார்கள் .நேற்றைய தினம் காலை 8 மணியிலிருந்து தண்ணீர் இல்லாமல் மிகவும் சிரமமாக இருந்தது.
யாழ்.மாநகரசபைக்கு இது தொடர்பாக அறிவித்திருந்தோம்.
இதற்கான தீர்வு கேட்ட போது அங்கு அறிவித்திருக்கிறோம், இங்கு அறிவித்திருக்கிறோம் என்று சொல்லுகிறார்களே தவிர இதற்கான ஒழுங்கான எந்த பதிலும் இல்லை என யாழ் நவீன சந்தை வியாபாரிகள் விசனம் செய்துள்ளனர்.