யாழ் பாடசாலை மாணவர்கள் தொடர்பில் பொலிஸார் பகீர் தகவல்! கும்பலுக்கு வலைவீச்சு
யாழ்.நகர் புற பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி வரும் கும்பலை கைது செய்வதற்கு யாழ்ப்பாண பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த கும்பல் மாணவர்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு மாணவர்களை உள்ளாக்கி வருவது தொடர்பில் பொலிஸாருக்கு இரகசிய தகவல்கள் கிடைக்கப்பெற்றதாக கூறப்படுகின்றது.
காணொளி எடுத்து அச்சுறுத்தல்
மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி அவர்கள் ஓரின சேர்க்கையில் ஈடுபடுவதாகவும் பொலிஸார் அதிர்ச்சித்தகவலை வெளியிட்டுள்ளனர்.
அதோடு , அவற்றினை காணொளி பதிவாக கையடக்க தொலைபேசிகளில் பதிவு செய்து, அதனை காண்பித்து தொடர்ந்து தமது இச்சைகளுக்கு மாணவர்களை பயன்படுத்தி வந்ததுடன், மாணவர்களிடம் இருந்து பணமும் பெற்று வந்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த கும்பல் தொடர்பில் தகவல்கள் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அக்கும்பலை சேர்ந்தவர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த நிலையில் அவர்களை கைது செய்தவற்கு நடவடிக்கைகளை யாழ்ப்பாண பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் கூறப்படுகின்றது.