பிக்பாஸ் வீட்டில் அதிரடி திருப்பம்; இந்தவாரம் வெளியேறப்போவது இவரா?(Video)
பிக் பாஸ் நிகழ்ச்சி 10 வாரங்களை வெற்றிகரமாக கடந்துள்ள நிலையில் இந்தவாரம் பிக்பாஸ் வீட்டிலிரு இலங்கைப்பெண்னான ஜனனி வெளியேறவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் 6வது சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரிய செலிபிரிட்டிக்கள் இல்லாதது ரசிகர்களை அதிகம் கவரவில்லை என கூறப்படுகின்றது.
ஆரம்பத்தில் ஜிபி முத்து வருகையால் ரசிகர்களின் கவனத்தை பெற்ற பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அவர் அதிரடியாக வெளியேறிய பின்னர் சண்டைகள் மற்றும் சச்சரவுகள் இல்லாமல் சைலன்ட்டாக டாஸ்க் மட்டுமே போட்டியாளர்கள் விளையாடி வருவதால் ரொம்பவே போரிங்கான சீசனாக இந்த பிக் பாஸ் மாறிவிட்டதாக பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற ஹவுஸ்மேட்கள் அசீம், விக்ரமன், ஏடிகே, ரச்சிதா, ஜனனி மற்றும் மணிகண்டன் உள்ளிட்ட போட்டியாளர்களை நாமினேட் செய்தனர். இந்நிலையில் இந்தவாரம் ஜனனி வெளியேற்றப்பட்டலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.