ஐரோப்பிய நாடொன்றில் கோரவிபத்தில் உயிரிழந்த இலங்கையர்!
இத்தாலியில் இடம்பெற்ற கோர விபத்தில் இலங்கையர் ஒருவர் பரிதாகமாக உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத்தாலியின் நாபோலி நகரத்தில் நேற்றையதினம் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் 42 வயதான இலங்கை தமிழ் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்டுப்பாட்டை இழந்த கார்
கார் ஒன்றில் மூன்று பேர் பயணித்த நிலையில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் அருகிலுள்ள தூணில் மோதி விபத்து ஏற்படடுள்ளது.
சம்பவத்தில் காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த 42 வயதுடைய இலங்கையரே உயிரிழந்துள்ளார், அதேவேளையில் ஏர்பேக்குகள் பொருத்தப்பட்டதன் மூலம் சாரதியும் ஏனைய பயணிகளும் காப்பாற்றப்பட்2டுள்ளனர்.
விபத்துக்குள்ளான காரை 27 வயதான இளைஞர் ஒருவரே ஓட்டிச்சென்றதாக கூறப்படும் நிலையில் நிலையில் அந்நாட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளி முன்னெடுத்து வருகின்றனர்.