இது அம்மாவின் முடிவு; மஹிந்தவிடம் இருந்து ரணிலிடம் தாவல்!
தனது தாய் கூறியதன் காரணமாகவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க முடிவெடுத்தாக மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி தேர்தலில் ஆதரிப்பதில்லை என தீர்மானம் எடுக்கப்பட்டது.
இது அம்மாவின் முடிவு
இந்நிலையில் கூட்டத்தில் பங்கேற்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன ஜனாதிபதி ரணிலை ஆதரிப்பதாக அறிவித்திருந்தார்.
தனது இந்த முடிவுக்கான காரணத்தையும் களுத்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசியபோது அவர் வெளிப்படுத்தியுள்ளார். இதன்போது,
“என் அம்மாவுக்கு 87 வயது. மகனே, மிஸ்டர் மஹிந்தவை விட்டுவிட்டு வீட்டுக்கு வராதே என்று 2015ஆம் ஆண்டு அவர் சொல்லியிருந்தார்.
ஆனால் இந்த முறை, மகனே, போய் ரணிலை ஜனாதிபதியாக வெற்றிபெற செய்வதற்கான வேலையைச் செய்யுமாறு கூறினார். அதனால்தான் இந்த முடிவை எடுத்தாகவும் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.