ஆட்சியைத் தீர்மானிப்பது மக்களே; நாமலுக்கு மைத்திரி பதிலடி
நாட்டில் தேர்தல் ஒன்று மிகவும் அவசியம் என தெரிவித்த ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால, ஆட்சியைத் தீர்மானிப்பது கட்சி அல்ல மக்களே என நாமலின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த முன்னாள் ஜ்னாதிபதி மைத்திரி,
ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தி கட்சியினருக்கு இல்லை
ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியினராக மக்களே உள்ளனர் என்றும், ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தி கட்சியினருக்கு இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதோடு மக்கள் ஆணை இன்றி எவரும் ஆட்சியமைக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயாராக உள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இலங்கையின் ஆட்சியைத் தீர்மானிக்கும் வல்லமை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கே உண்டு என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்த கருத்துக்கே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.