ஏற்றுமதி செய்ய வேண்டியது குரங்குகளை அல்ல; இலங்கை அரசியவாதிகளையே!
குரங்குகளின் மூளையை உண்ணும் விலையுயர்ந்த உணவு வகை ஒன்று சீன உணவகங்களில் இருப்பதாகவும், அதற்காகவே இலங்கை, சீனாவுக்கு குரங்குகளை அனுப்பத் தயாராகி வருவதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர் நயனக ரன்வெல்ல குற்றம் சுமத்தியுள்ளார்.
சில மருந்துகளின் இறுதிக் கட்ட பரிசோதனைகளுக்கு பல வகையான குரங்குகளை பயன்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவும் குரங்குக்காக கோரிக்கை
ஒரு லட்சம் குரங்குகளை பெறுவதற்கான சீனாவின் தேவையின் பின்னணியில் அதுவும் இருக்கலாம் எனவுவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதுமட்டுமல்லாது அமெரிக்காவிலிருந்தும் குரங்குகளை பெற கோரிக்கை பெறப்பட்டுள்ளதாகவும், நிச்சயமாக அந்த கோரிக்கைகள் ஆய்வக சோதனைகளுக்காக பெறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இலங்கையின் சட்டதிட்டங்களின் பிரகாரம் இவ்வாறான விடயங்களுக்கு வனவிலங்குகளை ஏற்றுமதி செய்வதற்கு சந்தர்ப்பம் இல்லை எனவும் அவர் கூறினார்.
இந்த தீர்மானத்தை எடுக்க முயலும் அரசியல்வாதிகள் இலங்கையை பூர்வீகமாக கொண்ட வனவிலங்குகளை ஏற்றுமதி செய்யாது என்றும் , அந்த முடிவை எடுத்த அரசியல்வாதிகளை ஏற்றுமதி செய்ய வேண்டும் எனவும் சுற்றுச்சூழல் ஆர்வலர் நயனக ரன்வெல்ல தெரிவித்துள்ளார்.