மட்டக்களப்பு பிரபல்யமான கல்லூரியில் மறுபடியும் குழப்பம்! பின்னணியில் முக்கிய மதத் தலைவர்!!
மட்டக்களப்பின் பிரபலமான ஒரு பாடசாலையின் செயற்பாடுகளைக் குழப்பும் நடவடிக்கைகள் மறுபடியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
குறிப்பிட்ட அந்தப் பாடசாலையில் அதிபருக்கு எதிராகச் சதிசெய்வது, அதிபரை மாற்றுவது என்று பல்வேறு குழறுபடிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று, கடைசியில் தகுதிவாயந்த ஒரு நிரந்தர அதிபர் கல்வித்திணைக்களத்தால் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அதிபரையும் பதவியேற்கவிடாது தடுக்கும் நடவடிக்கைகளை சிலர் மேற்கொண்டுவருவதாகத் தெரியவருகின்றது.
ஒரு முக்கிய மதத் தலைவர் இந்தச் சதியின் பின்னணியில் இருந்து செயற்படுவதாகவும், ஒரு இராஜாங்க அமைச்சர், கல்வித்திணைக்களத்தில் ஒரு முக்கிய அதிகாரி போன்றோரும் இந்தச் சதிப்பணியில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
150 வருட நிகழ்வுகள் முடியும்வரை தற்போதுள்ள தற்காலிக அதிபரைப் பதவியில் அமர்த்திவைக்கும் வகையில் முயற்சிகளை இவர்கள் மேற்கொண்டுவருவதாகத் தெரியவருகின்றது.
அதற்கான வேண்டுகோள் கடிதங்களை எழுதுமாறு பெற்றார் ஆசிரியர் சங்கத்தினர், மட்டக்களப்பு சிவில் சமூகத்தினர், பழையமாணவர் சங்கத்தினர் போன்றோர் கேட்கப்பட்டுவருவதாகவும் கூறப்படுகின்றது.
குறிப்பிட்ட மதத் தலைவரின் பிரத்தியேச் செயலாளர் தற்பொழுது கொழும்பில் தங்கியிருந்து இதுவிடயமாக அலுவல்களைக் கவணித்துவருவதாகவும் தெரியவருகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேராத ஒருவர் பிபல்யமான அந்தப் பாடசாலையில் அதிபராக வந்துவிடக்கூடாது என்பதில் சில பிரதேசவாதிகள் கங்கணம்கட்டி நிற்பதாகத் தெரியவருகின்றது.
‘மாணவர்களின் கல்வியிலுமாடா நீங்க பிரதேசவாதம் பார்ப்பீர்கள்’ என்று மதக் காரியங்கள் தவிர மற்றைய அனைத்துக் காரியங்களையும் பார்த்துக்கொண்டு திரியும் அந்த மதத் தலைவரைத் திட்டடித்தீர்க்கின்றார்கள் பெற்றோர்.