வளைகுடாவில் போர் பதற்றம்; லெபனான் மக்களை உடனடியாக வெளியேற உத்தரவு
தெற்கு லெபனானில் லிட்டானி ஆற்றிற்கு (Litani River) தெற்கே வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணுவம் கட்டாய உத்தரவு பிறப்பித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலிய எல்லைக்கும் லிட்டானி ஆற்றிற்கும் இடைப்பட்ட பகுதிகளை 'சிவப்பு வலயமாக' அறிவித்துள்ள இஸ்ரேல் இராணுவம், அங்குள்ள மக்களை வடக்கு நோக்கி இடம்பெயருமாறு அறிவுறுத்தியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை முதல் ஹிஸ்புல்லா அமைப்பு மற்றும் இஸ்ரேலிய இராணுவத்திற்கு இடையே வான்வழி மற்றும் தரைவழி மோதல்கள் தீவிரமடைந்துள்ளன.
லெபனானின் தெற்குப் பகுதிகள் மற்றும் பெய்ரூட் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தி தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றது.
தொடர்ச்சியான தாக்குதல்கள் மற்றும் வெளியேற்ற உத்தரவுகளால் அப்பகுதியில் பாரிய மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றதாக அல்ஜெசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
ஒருவாரமாக முடிவில்லாது நீளும் இஸ்ரேல் - ஈரான் போரினால் உலக நாடுகள் அச்சத்திதில் உள்ளன.