உச்சம் அடையும் இஸ்ரேல் – ஈரான் – லெபனான் போர்; நடுங்கும் நெதன்யாகு !
இஸ்ரேல் – ஈரான் – லெபனான் போர் விவகாரம் உச்சம் அடைந்து உள்ள நிலையில் இஸ்ரேல் அடுத்தடுத்து பின்னடைவுகளை சந்தித்து வருகிறது. இந்த நிலையில்தான் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு கைகள் நடுங்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
நேற்று லெபனான் உள்ளே ஊடுருவி தாக்குதல் நடத்த முயன்று உள்ளது இஸ்ரேலின் எலைட் படிப்பிரிவான Egoz சிறப்புப் படைப் பிரிவு. அவர்களை தடுக்கும் விதமாக லெபனான் படை வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
அஞ்சி ஓடிய இஸ்ரேல் வீரர்கள்
ஹிஸ்புல்லாவுடன் நடந்த சண்டையில் 8 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில் மீதம் இருந்த வீரர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் அங்கிருந்து ஓடி உள்ளனர்.
இஸ்ரேல் வீரர்களை துப்பாக்கியால் தாக்கியும், கையால் அடித்தும், கையெறி குண்டுகளை வீசியும் ஹிஸ்புல்லா படை வீரர்கள் கொன்றுள்ளனர். இதனால் அச்சமடைந்த இஸ்ரேல் வீரர்கள் வேறு வழியின்றி லெபனானில் இருந்து வெளியேறி உள்ளனர்.
லெபனானில் இருக்கும் தெற்கு எல்லை பகுதியை ஊடுருவ முயன்று இஸ்ரேல் தோற்று ஓடி உள்ளது.
வடகிழக்கு எல்லைக் கிராமமான அடேஸ்ஸேவிற்குள் நுழைய முயன்ற இஸ்ரேலிய வீரர்களை திரும்பப் பெறும் நிலை ஏற்பட்டு உள்ளது. இஸ்ரேலிய இராணுவம் தெற்கு லெபனானைத் தாக்குவது இதுவே முதல்முறை.
சமீபத்தில்தான் இஸ்ரேலிய ராணுவம் F-35 போர் விமானங்களை வைத்து அங்கே தாக்குதல் நடத்தியது. பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியான தாஹியில் கடுமையான தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்புதான் ஹிஸ்புல்லா ட்ரோன் பிரிவு தளபதி இஸ்ரேல் தாக்குதலில் கொலை செய்யப்பட்டார்.
வைரலாகும் காணொளி
இப்படிப்பட்ட நிலையில் அங்கே தரைவழி தாக்குதலை செய்ய முயன்று இஸ்ரேல் தோற்று உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு கைகள் நடுங்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
Pay close attention to Benjamin Netanyahu’s hands pic.twitter.com/zvnaq80GVN
— Matt Wallace (@MattWallace888) October 1, 2024
ஈரான் , லெபனான் உள்ளே தாக்குதல் நடத்துவது பற்றி நெதன்யாகு நேற்று பேட்டி அளித்தார்.
அந்த பேட்டியின் போதுதான் அவரின் கைகள் நடுங்கியது. பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவரின் கைகள் நடுங்குவது போல அவரின் கைகள் இங்கும் அங்கும் மாறி மாறி நடுங்கியது.
அவருக்கு உடல் ரீதியாக பாதிப்பு எதுவும் இருக்கிறதா அல்லது மன ரீதியாக பாதிப்பு ஏற்பட்டு உள்ளதா என்ற குழப்பம் ஏற்பட்டு உள்ளது. இஸ்ரேல் – ஈரான் போர் முற்ற தொடங்கி உள்ளது. இதில் ஈரானுக்கு சாதகமாக இருக்கும் லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
லெபனான் மீது தாக்குதல் நடத்திய பின்பே ஈரான் பொறுத்தது போதும் பொங்கி எழுவோம் என்று இஸ்ரேலை தாக்கியது.
நேற்று முதல்நாள் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில், லெபனானுக்கு நுழைய முயன்ற இஸ்ரேலின் Egoz சிறப்புப் படைப் பிரிவு பின்வாங்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.