புலிகள் அமைப்பை புகழும் இராஜாங்க அமைச்சர்
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பினை விட இஸ்லாமிய அடிப்படைவாதம் பாரதூரமானது. இஸ்லாமிய அடிப்படைவாதத்தை முழுமையாக இல்லாதொழிக்கவே 69 இலட்சம் மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் (gotabaya rajapakse) தலைமையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்.
ஆகவே இவ்விடயத்தில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்படும் என தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் கப்பல் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான ஜயந்த சமரவீர (Jayantha Samaraweera) தெரவித்தார்.
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்று (01) இணைய வழியூடாக இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
தமிழ் பிரிவினைவாதம் நாட்டின் அரசியலமைப்புக்கு முரணாக செயற்பட்டதால் பாரிய விளைவுகள் நாட்டில் தோற்றம் பெற்றன. 30 வருட கால யுத்தம் பல்வேறு தரப்பினருக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (mahinda rajapakse) தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பினை நாட்டிலிருந்து இல்லாதொழித்தார்.
தமிழ் பிரிவினைவாதத்தை விட இஸ்லாமிய அடிப்படைவாதம் பாரதூரமானது. இதன் விளைவை 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் ஊடாக விளங்கிக் கொள்ள முடிந்தது.
இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு இதற்காகவே 69 இலட்சம் மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் பலமான அரசாங்கத்தை தோற்றுவித்துள்ளார்கள் என்றார்.