சவுண்டு பார்டி; விஜய் டிவியின் செல்லப்பிள்ளை பிரியங்கா இப்படிப்பட்டவரா?
பாசக்கார பயலுங்கப்பா எங்க போனாலும் கூட்டிட்டு போயிடுவாங்க. பாருங்களேன் சூப்பர் சிங்கர் முடிஞ்சதும் பிக் பாஸூக்கு கூட்டிட்டு போயிடாங்க.. இப்படி தான், விஜய் டிவியின் செல்லப்பிள்ளை தொகுப்பளினி பிரியங்காவின் பிக் பாஸ் எண்ட்ரி கேலி கிண்டலாக மாறியுள்ளது.
அதுமட்டுமில்லை ஓவர் வாய்.. எப்ப பார்த்தாலும் பேசிட்டே இருப்பாங்க.. சவுண்டு பார்டி இப்படியெல்லாம் கூட பிரியங்காவை குறித்த கருத்துக்கள் சமூகவலைத்தளங்களில் உலா வருகின்றது. ஆனால் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர், ஜூனியர் சூப்பர் சிங்கர், காமெடி ராஜா கலக்கல் ராணி, ஸ்டார் மியூஸிக் உள்ளிட்ட எல்லா நிகழ்ச்சியிலும் அவரை பார்க்கலாம். சொல்லப்போனால் டிடிக்கு பிறகு விஜய் டிவியின் செல்லப்பிள்ளை என்றால் அது பிரியங்கா தான்.
இவரும் மா.கா.பா ஆனந்தும் சேர்ந்தாலே போதும் அந்த இடமே கலாட்டாவாக இருக்கும். தன்னைத்தானே கலாய்த்தும் கொள்ளும் பிரியங்கா மிகவும் ஜாலியான கேரக்டர். யார் கலாய்த்தாலும் சரி அதை டேக் இட் ஈஸி என எடுத்துக் கொள்பவர்.
பிரியங்கா வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான். படித்தது எத்திராஜ் காலேஜில். படிக்கும் போதே ஆங்கரிங்கில் பயணத்தை தொடங்கியவர் சன் டிவியில் குட் மார்னிங் ஷோவில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தார். கல்லூரி படிக்கும் போதே தனது நண்பர்களுடனும் சரி டிபார்ட்மெண்ட் மாணவர்களிடமும் சரி சகஜமாக பேசுவதே பிரியங்காவின் வழக்கம். அதாவது பேசுவதை ஃபுல் டைல் ஜாப் போல் செய்து வந்துள்ளார். எனினும் அது சிலருக்கு பிடிக்கும். சிலருக்கு அதிகம் பேசுபர்களை கண்டால் பிடிக்காது. அதனால் தான் ஓவர் வாய் என்ற கமெண்ட் பிரியங்கா மீது அதிகம் வைக்கப்படுகிறது.

பிரியங்கா பெற்றோர் முதலில் மகாராஷ்டிராவில் இருந்து கர்நாடகாவில் குடியேறியவர்கள். பூர்விகம் என்றால் பிரியங்காவுக்கு மகாராஷ்டிரா தான். சன் டிவியில் இருந்து தனது ட்ரீமை விஜய் டிவி பக்கம் திருப்பியவர் மாகாபா ஆனந்துடன் சினிமா காரம் காப்பி மற்றும் ஒல்லி பெல்லி ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இவை தவிர, அவர் கலக்க போவது யாரு சீசன் 6 மற்றும் 7 இன் நடுவராகவும் இருந்தார்.
பிரியங்காவுக்கு ஆங்கிலம், தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மராத்தி உட்பட 5 மொழிகள் தெரியுமாம். மீடியாவில் ஹிட் அடித்த பிரியங்காவுக்கு முதல் திருமண வாழ்க்கை கைக்கொடுக்கவில்லை. அதன் பின்பு சூப்பர் சிங்கர் பிரவீனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு கெரியர், பர்சனல் லைஃப் என பிஸியாக இருக்கிறார்.
அதுமட்டுமில்லை யூடியூப் சேனலை தொடங்கிய அதன் மூலம் பல லட்சங்களில் ரெவன்யூ பார்க்கிறார்.
பல ஆண்டுகளாக பிரியங்கா விஜய் டிவியில் இருந்தாலும் இந்த ஆண்டு தான் அவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
தனக்கென தனி ரசிகர்களை சம்பாதித்துள்ள பிரியங்கா பிக் பாஸ் வீட்டிலும் இப்படியே தான் இருப்பார் என அவரின் நெருங்கிய நண்பர்கள் கூறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.