மருதாணியில் இவ்வளவு விஷயம் இருக்கா
மருதாணி செடியின் வேர்கள், தண்டுகள், இலைகள், பூ காய்கள் மற்றும் விதைகள் அனைத்தும் அதிக மருத்துவ குணம் கொண்டவை.
எந்தவித பக்கவிளைவும் இல்லாமல், தலையை அழகுப்படுத்தவும், கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. நோய் குணப்படுத்தும் ஆற்றல் மற்றும் குளிர்ச்சியான பண்புகளுக்காக அறியப்பட்ட மருதாணியின் பயன்கள் மிகவும் அதிகமானவை.
ஒற்றைத் தலைவலிக்கு நல்லது
தலைவலியிலிருந்து விடுபட உதவுகிறது, குறிப்பாக ஒற்றைத் தலைவலிக்கு மிகவும் நல்லது. பித்த தோஷத்தின் தீவிரத்தால் ஏற்படும் தலைவலியையும் மருதாணி குணப்படுகிறது. பித்தத்தை சமநிலைப்படுத்துவதன் மூலம் இந்த தலைவலியை நீக்குகிறது மருதாணி.
வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தும் மருதாணி
குடலில் நீர் திரவத்தைத் தக்கவைத்து, அதன் மூலம் வயிற்றுப்போக்கைத் தடுக்கும் மருதாணி, பித்தம் அதிகமாவதால் ஏற்படும் நோய்கள் அனைத்தையும் சீராக்கும் பண்பு கொண்டது.
பொடுகு பிரச்சனைக்கு மருதாணி
தலை பொடுகு, அரிக்கும் தோலழற்சி, சிரங்கு, பூஞ்சை தொற்று மற்றும் காயங்களுக்கு மருதாணி பயன்படுத்தப்படுகிறது.
பொடுகு வராமல் தடுக்க உதவும் மருதாணியை, பொடுகு வைத்தியத்தில் முக்கிய இடம் பிடித்துள்ளது.
முடியை பலப்படுத்தும் மருதாணி
மருதாணி முடியை பலப்படுத்துகிறது, ஹேர் டையாகப் பயன்படுத்தினால், அது நமது நுண்ணறைகளின் ஆரோக்கியத்தை நிரந்தரமாக பாதிக்காது.
அதற்குப் பதிலாக, முடி உதிர்வதைத் தடுக்கவும், நம் தலைமுடியை பளபளக்கச் செய்யவும் உதவும். மருதாணி அடிப்படையிலான கண்டிஷனரைப் பயன்படுத்துவது உச்சந்தலையில் எண்ணெய் உற்பத்தியை சமநிலைப்படுத்த உதவுகிறது.
ஆர்கானிக் மூலிகை மூலப்பொருளான மருதாணி, நரைத்தல் மற்றும் இளநரையை போக்கவும் மருதாணி பயன்பாடு அவசியமானது.
மருதாணியை கையில் மற்றும் கால்களில் வைப்பது நமது கலாச்சார வழக்கம். மருதாணி நல்ல அதிர்வுகளை கொடுக்கும் மூலிகையாக பார்க்கப்படுகிறது.