இலங்கை நாடாளுமன்ற எம்.பிகள் சம்பளம் இவ்வளவா? வாய் பிளக்கும் மக்கள்!
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளங்கள் ( மாதாந்த அடிப்படையில் ) விபரங்கள் வெளியாகியுள்ளன.
நாட்டு மக்கள் வறுமையில் தவிக்க நாடாளுமன்ற எம்.பிகள் சம்பளம் இவ்வளவா? என நெட்டிசன்கள் வாய் பிளக்கின்றனர். அந்தவகையில் ,
சம்பளம்
பிரதமர் 71500, சபாநாயகர் 68 000,
பிரதி சபாநாயகர் 63 500,
அமைச்சரவை அமச்சர்கள் 65 000,
இராஜாங்க அமைச்சர்கள் 65000,
எதிர்கட்சிதலைவர்கள் 65 000,
நாடாளுமன்ற உறுப்பினர்கள் 54 285 ரூபாவும் சம்பளமாக பெறுகின்றனர்.
கொடுப்பனவுகள்
அதுமட்டுமல்லாது அவர்களுக்கான
போக்குவரத்து கொடுப்பனவுகள் 15000,
தொலைபேசி கொடுப்பனவுகள் 50 000,
நாளாந்த வருகைக்கான கொடுப்பனவு 2500,
பொழுதுபோக்கு கொடுப்பனவு 4500,
அலுவலக பராமரிப்பு கொடுப்பனவு 100 000 வழங்கப்படுகின்றது.
இவைகள் அல்லாது எரிபொருள் கொடுப்பனவுகள், தற்போதைய எரிபொருள் விலைகளின் பிரகாரம் அவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் இடையிலான தூரத்தின் அடிப்படையில் வழங்கப்படும் எனவும் கூறப்படுகின்றது.
மேலும் ரூ.50 மில்லியன் பெறுமதிக்கும் அதிகமான மோட்டார் வாகன அனுமதிப்பத்திரத்தை ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெறுகின்றனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.