எரிவாயு நிறுவனம் உற்பத்தியை நிறுத்தும் நிலை?
நாட்டில் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு வெளியிடப் படாமையால் லிட்ரோ எரிவாயுவுக்கு கடும் கேள்வி ஏற்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
நாளாந்தம் 1000 மெற்றிக் தொன் எரிவாயுவை சந்தைக்கு வெளியிட நடவடிக்கை எடுத்த போதிலும் லாஃப்ஸ் செயலிழந்ததன் காரணமாக இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கு வெளிநாட்டு நாணயம் இல்லாததாலும் கடன் பத்திரங்களைத் திறப்ப தில் உள்ள தடைகளாலும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் உற்பத்தியை ஆரம்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள் ளதாக லாஃப்ஸ் நிறுவனத் தலைவர் டபிள்யூ.கே.எச்.வேகபிட்டிய தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த பிரச்சினைக்குத் தீர்வு காண எந்தவித சாதகமான தலையீடும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப் படவில்லை எனவும் அவர் கூறினார்.