சமந்தாவை மறைமுகமாக சாடினாரா நடிகர் சித்தார்த்?...ட்விட்டால் எழுந்த பரபரப்பு
நடிகை சமந்தா அவர்கள் தனது திருமண வாழ்க்கையை முடித்துக்கொள்வதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை போட்டிருந்தார்.
இது தான் தற்போது திரையுலகின் முக்கிய பேசு பொருளாக மாறியுள்ளது. நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
எனோ இவர்களுக்குள் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக தற்போது இந்த முடிவினை எடுத்துள்ளனர்.
இந்த நிலையில் நடிகை சமந்தாவின் முன்னாள் காதலரும் நடிகருமான சித்தார்த் அவர்கள் ஒரு ட்விட் ஒன்றை பதிவிட்டிருந்தார் தற்போது இது தான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில் அவர் தெரிவித்திருந்ததாவது,
'பள்ளியில் எனது ஆசிரியரிடம் நான் கற்றுக்கொண்ட முதல் பாடம் ஏமாற்றுபவர்கள் ஒருபோதும் முன்னேறமாட்டார்கள்" என பதிவிட்டிருந்தார்.
தற்போது சமந்தா அவர்களுக்கு விவாகரத்து ஆக உள்ள நிலையில் சித்தார்த் சமந்தாவை தான் மறைமுகமாக சாடி அந்த ட்விட்டை போட்டதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது.