முட்டையை விட வேர்க்கடலை வெண்ணெயில் அதிக சத்து உள்ளதா?
வேர்க்கடலை வெண்ணெய் ஒரு ஆரோக்கியமான உணவு. புரதம், நார்ச்சத்து, வைட்டமின் B3, வைட்டமின் B6, ஃபோலேட், மெக்னீசியம், தாமிரம் மற்றும் மாங்கனீசு போன்ற சிறந்த ஆரோக்கியத்திற்காக பல ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் இதில் காணப்படுகின்றன.
இது தவிர வைட்டமின் B5, துத்தநாகம், பொட்டாசியம், இரும்பு மற்றும் செலினியம் ஆகியவை இதில் காணப்படுகின்றன.
இந்தச் சத்துக்கள் உடல் எடையைக் குறைக்கவும், இதய நோயை எதிர்த்துப் போராடவும், நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்கவும் உதவுகின்றன.
இதை காலையிலும் மாலையிலும் எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஒரு ஸ்பூன் வேர்க்கடலை வெண்ணெயில் 8 கிராம் புரதம் காணப்படுவதோடு முட்டையில் 6 கிராம் புரதம் காணப்படுகின்றது.
இதனால் வேர்க்கடலை வெண்ணெ முட்டையை விட அதிக சத்து உள்ளதாக காணப்படுகின்றது.
வேர்கடலை வெண்ணெயை தினமும் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்.
உடல் பருமன்
வேர்க்கடலை வெண்ணெயில் அதிக அளவு புரதம் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இது நீண்ட நேரம் நிறைவாக உணர வைப்பதோடு இது உடல் எடை அதிகரிப்பதை தடுக்கிறது மற்றும் ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவுகிறது.
இதய ஆரோக்கியம்
வேர்க்கடலை வெண்ணெயில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் இதயத்திற்கு நல்லது. இதய நோயிலிருந்து உங்களைப் பாதுகாக்க உதவுகிறது.
அதிக புரதம்
வேர்க்கடலை வெண்ணெய் ஒரு நல்ல புரத மூலமாகும். ஒரு டீஸ்பூன் வேர்க்கடலை வெண்ணெயில் 8 கிராம் புரதம் உள்ளது. எனவே, இதை தினமும் சாப்பிடுவது உடலுக்கு சிறந்தது.
நார்ச்சத்து நிறைந்தது
வேர்க்கடலை வெண்ணெயில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது, இது பசியைக் குறைக்க உதவுகிறது. இதை சாப்பிடுவதால் அதிக பசி ஏற்படாது, இது உடல் எடையை குறைக்க உதவுகிறது.
வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சிறந்த ஆதாரம்
வேர்க்கடலை வெண்ணெயில் வைட்டமின் ஈ, ஃபோலிக் அமிலம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகம் உள்ளன.
இந்த முக்கியமான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் உடலின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகின்றன.