நித்தியானந்தா உயிரிழந்து விட்டாரா? வெளியான பரபரப்பு தகவல்
நித்தியானந்தா இறந்துவிட்டதாக அவரது சகோதரி மகன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும் , இந்தத் தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த நித்தியானந்தா மீது இந்தியாவில் பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில் இந்தியா அரசங்கம் அவரை தேடி வருகின்றது.
கைலாசாவில் இருந்து உறுதிப்படுத்தவில்லை
அதனை தொடர்ந்து நாட்டைவிட்டு வெளியேறிய நித்தியானந்தா, கைலாசா என்ற தனித் தீவை உருவாக்கியிருப்பதாக அறிவித்ததுடன் , அது இந்துக்களுக்கான தனி நாடு என்றும், தனி கரன்சி, பாஸ்போர்ட், கொடி ஆகியவற்றை உருவாக்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.
அதன்பின்னர் அவ்வப்போது காணொளி வாயிலாக நித்தியானந்தா உரையாடி வந்தார்.
இந்நிலையில், நித்தியானந்தா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக தகவல் பரவியுள்ள நிலையில் எனினும் , கைலாசாவில் இருந்து யாரும் அதை உறுதிப்படுத்தவில்லை என கூறப்படுகின்றது.
அத்வேளை மூன்று ஆண்டுகளுக்கு முன்பும் நித்தியானந்தா இறந்துவிட்டதாக வதந்திகள் பரவி இருந்த நிலையில், அதன் பின்னர் நித்தியானந்தா காணொளி வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.