காலி சிறைச்சாலை இடம் மாற்றபடுகின்றதா?
காலி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (11) நடைபெற்ற நிலையில், காலி சிறைச்சாலையை அதன் தற்போதைய இடத்திலிருந்து இடமாற்றம் செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.
தற்போதைய காலி சிறைச்சாலை அமைந்துள்ள இடம் அதிக வணிக மதிப்பைக் கொண்டதால் நகரத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம் என ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதித் தலைவர், நளின் ஹேவகே தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “இது சுமார் 4 ஏக்கர் நிலம். எதிர்காலத்தில் அனைத்தும் டிஜிட்டல் முறைக்கு மாறப்போவதால், சிறையில் உள்ளவர்கள் நீதிமன்றத்துக்கு செல்வதை நிறுத்திவிடுவார்கள்.
எனவே சிறைச்சாலை சற்று தொலைவில் இருப்பது பெரிய பிரச்சினை இல்லை. இது குறித்து அமைச்சரிடமும் விவாதித்தோம்” எனத் தெரிவித்துள்ளார்.