அமெரிக்காவால் சுட்டுப் பிடிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ; ட்ரம்பின் அதிரவிடும் அறிவிப்பு
அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை மீறி ஹார்முஸ் நீரிணை வழியாக ஈரானியக் கொடியுடன் செல்ல முயன்ற டூஸ்கா (TOUSKA) என்ற கப்பலை அமெரிக்கக் கடற்படையினர் தங்கள் வசம் கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் (Truth) சமூக வலைதளபக்கத்தில் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

எச்சரிக்கை
ஓமான் வளைகுடாவில் டூஸ்கா (TOUSKA) என்ற கப்பல் வழிமறிக்கப்பட்டு, "நிறுத்துமாறு எச்சரிக்கை" விடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளத. ஈரானியக் குழுவினர் அந்த உத்தரவிற்குக் கீழ்ப்படிய மறுத்ததால் குறித்த கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், தற்போது முழு கப்பலும் எங்கள் வசம் உள்ளது எனவும் அதில் என்னென்ன பொருட்கள் கடத்தப்பட்டன என்பது குறித்துத் தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம் எனவும் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
எனினும் இது தொடர்பில் ஈரான் எதுவித அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை.