டியாகோ கார்சியாவில் ஈரான் ஏவுகணை தாக்குதல்! இந்தியப் பெருங்கடலில் ஆட்டம்
இந்தியப் பெருங்கடலில் உள்ள டியாகோ கார்சியாவில் அமைந்துள்ள அமெரிக்க-பிரிட்டிஷ் தளத்தின் மீது ஈரான் இரண்டு பலிஸ்டிக் ஏவுகணைகளைச் செலுத்தியதாக அறிவிக்கப்படுகிறது.
வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
ஈரானிலிருந்து இரண்டு இடைநிலைத் தொலைவு ஏவுகணைகள்,டியேகோ கார்சியாவை இலக்கு வைத்து ஏவப்பட்டுள்ளன.
எனினும் இந்த இரண்டு ஏவுகணைகளும் இலக்கை எட்டவில்லை. டியேகோ கார்சியா தளம் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஏவப்பட்ட ஏவுகணைகளில் ஒன்று நடுவானிலேயே செயலிழந்து வீழ்ந்துள்ளதாகவும், மற்றொன்றை அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்று AM-3 இடைமறிப்பு ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்த முயற்சித்துள்ளது.
அந்த இடைமறிப்பு முழுமையாக வெற்றியடைந்ததா என்பது குறித்த ஆய்வுகள் நடந்து வருவதாகவும் ரொய்டர்ஸ் செய்திகள் தெரிவிக்கின்றன.
முற்றிலும் தடைசெய்யப்பட்ட பகுதி
டியாகோ கார்சியா என்பது இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு முக்கிய அமெரிக்க-பிரிட்டிஷ் கூட்டு ராணுவத் தளத்தைக் கொண்ட பவளத் தீவு ஆகும்.
சாகோஸ் தீவுக்கூட்டத்தின் (Chagos Archipelago) ஒரு பகுதியான இது, ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கு இடையே மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் உள்ளது.
இந்தத் தீவு பொதுமக்களின் நுழைவு முற்றிலும் தடைசெய்யப்பட்ட, உயர் பாதுகாப்பு ராணுவத் தளமாகச் செயல்படுகிறது