ஈரான் போரால் பெரும் நஷ்டம் ; பெறுமதியான இராணுவ விமானங்களை இழந்த அமெரிக்கா
அமெரிக்கா - ஈரான் போர்: ஹோர்முஸ் வளைகுடாவில் 240 மில்லியன் டாலர் மதிப்புள்ள MQ-4C Triton ஆளில்லா விமானத்தை (UAV) இழந்ததை அமெரிக்க கடற்படை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.
ஈரான் அணு ஆயுதம் வைத்துக்கொள்ளக்கூடாது எனக்கூறி அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி 28ம் தேதி அந்நாட்டின் மீது போரை துவங்கியது. போர் துவங்கிய இரண்டாம் நாள் இஸ்ரேல் தாக்கியதில் ஈரான் நாட்டின் உட்ச தலைவர் கமேனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்.

ஈரான் திருப்பி தாக்கும் என அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் அமெரிக்காவுக்கு உதவும் வளைகுடா நாடுகளின் மீது தாக்குதல் நடத்தியது. ஈரான் திருப்பி தாக்கும் என அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை.
குறிப்பாக கச்சா எண்ணெய் கொண்டுவரப்படும் ஹார்மோஸ் நீரிணையை ஈரான் முடிவிட்டதால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது ஒருபக்கம், கடந்த 20 வருடஙகளில் முதல் முறையாக அமெரிக்கா சில முக்கிய விமானங்களை போரில் இழந்திருக்கிறது.
அமெரிக்காவின் F15 மற்றும் A10 ரக விமானங்களை ஈரான் சுட்டு வீழ்த்தியது. ஈரானுடன் நடந்த போரில் 6 ஜெட் போர் விமானம் உள்ளிட்ட 33 விமானங்களை அமெரிக்கா இழந்துவிட்டது.
அதேநேரம் ஈரான் 51 ராணுவ விமானங்களை இழந்திருக்கிறது இந்நிலையில்தான், ஈரான் உடனான போரில் கோடி மதிப்புள்ள MQ-4C டிரைட்டன் கண்காணிப்பு ட்ரோனை இழந்ததை அமெரிக்கா உறுதிப்படுத்தியிருக்கிறது. இந்த போரில் அமெரிக்கா தனது 3 அதி நவீன F35 போர் விமானங்களை ஏற்கனவே இழந்துள்ளது குறிப்பிடத்தகக்து.
அதேவேளை இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த Triton விமானம் போரின்போது இழக்கப்படவில்லை; மாறாக, அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர்நிறுத்தம் அமலுக்கு வந்த சில நாட்களுக்குப் பின்னரே இது இழக்கப்பட்டது.