ஈரான் போர் கப்பலை கொழும்பில் தேடிய அமெரிக்க முக்கிய புள்ளிக்கு காத்திருந்த அதிர்ச்சி
அமெரிக்க போா் விமானங்கள் இலங்கையில் தரையிறங்குவதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கையைத் தனது அரசு நிராகரித்துவிட்டதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்த விடயம் பெரும் பேசுபொருளாகியிருந்தது.
இந் நிலையில் அண்மையில் அமெரிக்காவின் இராஜதந்திரிகள் வந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் சபையில் கேள்வியெழுப்பியிருந்தார்.

ஈரான் போர் கப்பல்
இந்தநிலையில் அவரின் கவனம் முழுவதும் கொழும்புதுறைமுகத்தை சுற்றி வந்ததாக இருந்தது என்று இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுகத்தில் நடந்து பார்த்துள்ளார் என்றும் ஒரு கப்பலில் ஏறி பார்க்க வேண்டும் என்று அவர் கேட்டுள்ளாதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன் தற்போது உலகில் இடம்பெறும் அசாதாரண நிலை தொடர்ந்து காணப்படுமாயின் உலக நாடுகளுடன் சேர்ந்து இலங்கையின் நிலைமையும் மோசமடையும் எனவும் தெரிவித்துள்ளார்.
குறித்த கருத்துக்களை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இவை தொடர்பான மேலதிக தகவல்களை கீழ்வரும் காணொளியில் காணலாம்...