இரண்டு கப்பல்களை சிறைபிடித்த ஈரான் ; மீண்டும் உருவான போர் சூழல்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இரண்டு வார இடைக்கால போர் நிறுத்தம், மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஈரான் துறைமுகத்திற்கு செல்லும் கப்பல்களை முற்றுகையிடுவோம் என அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
ஈரானுக்கு ஏவுகணை தயாரிக்கும் ரசாயணம் கொண்டு சென்ற கப்பலை அமெரிக்கா கடற்படை தடுத்து நிறுத்தி, கப்பலை தங்களது கட்டுப்பாட்டுக்குகள் கொண்டு வந்தது. இதற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்தது.

இரண்டு கப்பல்கள் பறிமுதல்
இதற்கிடையே வளைகுடா கடற்பகுதியில் சென்ற இரண்டு கப்பல்கள் மீது ஈரான் புரட்சிகர படை தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில் அந்த இரண்டு கப்பல்களையும் ஈரான் புரட்சிகர படை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் ஈரான் துறைமுகத்திற்கு கப்பல்களை கொண்டு செல்ல இருக்கிறதாம். இந்த தகவலை ஈரானுக்கு சொந்தமான தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
அந்த இரண்டு கப்பல்கள் எம்.எஸ்.சி. பினாசெஸ்கா, எப்பாமினோடாஸ் என அடையாம் காணப்பட்டுள்ளது.
ஆனால், கப்பல் உரிமையாளர்கள் இது தொடர்பாக கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. அமெரிக்கா ஈரானின் இரண்டு கப்பல்களை பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.