தப்பியோடிய அமெரிக்க விமானியை பிடிப்பவர்களுக்கு பரிசு! ஈரான் அறிவிப்பு
ஈரானினால் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்தின் விமானியைப் பிடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஈரான் அரசு அந்நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தப்பியோடிய விமானியைப் பிடிப்பதற்கு உதவும் எந்தவொரு குடிமகனுக்கும் 66,100 அமெரிக்க டொலர் (2 கோடி ரூபாவிற்கும் அதிகம்) பரிசாக வழங்கப்படும் என டெஹ்ரான் அரசாங்கம் ஈரான் மக்களுக்குப் பாரிய வாக்குறுதி அளித்துள்ளது.

ஈரானிய பாதுகாப்புப் படையினர் நேற்று (3) நடத்திய தாக்குதலில் எஃப்-15 (F-15) ரக அமெரிக்கப் போர் விமானம் ஒன்று வீழ்த்தப்பட்டது.
அதில் இருந்த இரண்டு விமானிகளில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றைய விமானி தற்போது காணாமல் போயுள்ளார். இதனையடுத்து, காணாமல் போன தனது ஊழியரைத் தேடும் பணிகளை அமெரிக்கா தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது.