ஹோர்முஸ் நீரிணைக்கு ஈரானின் புதிய விதிகள்; அமெரிக்காவுக்கு தடை
ஹோர்முஸ் நீரிணை மற்றும் அரபிக்கடல் வழியாகப் பயணம் செய்யும் கப்பல்களுக்கு ஈரானின் புரட்சிகர இராணுவத்தின் கடற்படை கட்டளைப் பணியகம், புதிய விதிகளை விதித்துள்ளது.
அதன்படி, ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் அல்லது அமெரிக்க இராணுவத் தளங்களுக்கான தளவாடங்களைக் கொண்டு செல்லும் கப்பல்கள் எவையும் இனி ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க அனுமதிக்கப்பட மாட்டாது என்று ஈரான் அறிவித்துள்ளது.
பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அமெரிக்காவிற்கு இனி எந்த இடமும் இல்லை என, தெஹ்ரானை தளமாகக் கொண்ட மூலோபாய ஆய்வுகளுக்கான மையத்தின் ஆராய்ச்சியாளர் அலி அக்பர் தாரினி தெரிவித்துள்ளார்.
அத்துடன், பல தசாப்தங்களாக அமெரிக்காவிற்கும் அதன் அரபு நட்பு நாடுகளுக்கும் இடையே நடைமுறையிலிருந்த பாதுகாப்பிற்குப் பதிலாக எண்ணெய் என்ற ஒப்பந்தத்தை மாற்றியமைக்க ஈரான் தனது அண்டை அரபு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.