காமேனி இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு
ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஈரான் அணு ஆயுதம் உற்பத்தி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி அந்த நாட்டின் மீது தாக்குதலை நடத்தியது.

இறுதி சடங்கு ஜூலை 5 முதல் 9ம் தேதி வரை நடத்த ஈரான் திட்டம்
தாக்குதல் ஆரம்பித்த அடுத்த நாளே இஸ்ரேல் தாக்கியதில் ஈரானின் உச்ச தலைவர் அயதொல்லா காமேனி மற்றும் அவரின் குடும்பத்தினர் 18 பேர் ஒரே நேரத்தில் கொல்லப்பட்டனர்.
மேலும் காமெனியின் மகன் மொஜ்தாபா காமேனி படுகாயமடைந்தார். அவர்தான் தற்போது ஈரானின் புதிய உச்ச தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது போர்த்துவங்கி கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே அமைதிப் பேச்சு வார்த்தையில் ஒப்பந்தம் ஏற்பட்டு போர் நிறுத்தப்பட்டிருக்கிறது..
இந்நிலையில்தான், இறந்து போன காமெனியின் இறுதி சடங்குகளை ஜூலை 5 முதல் 9ம் தேதி வரை நடத்த ஈரான் திட்டமிட்டிருக்கிறது. காமெனியின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள இந்திய பிரதமர் மோடிக்கும் ஈரான் தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.