கத்தார் ஐந்து வருடத்திற்கு எழவே முடியாது; சொல்லி அடித்த ஈரான்!
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, கத்தாரின் எரிசக்தி உட்கட்டமைப்புகள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல்கள் உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கத்தார் எல்பிஜி ஆலை சீரமைக்க 5 ஆண்டுகள் ஆகும் என கத்தார் கூறியுள்ளது.
கத்தார் எனர்ஜி நிறுவனத் தலைவர் சாத் அல்-காபி கூறுகையில், இந்த தாக்குதலால் கத்தாரின் திரவ இயற்கை எரிவாயு ஏற்றுமதித் திறன் 17% சரிந்துள்ளதாகவும், இதனால் ஆண்டுக்கு 20 பில்லியன் டாலர் வருவாய் இழப்பு ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

சீரமைக்க 3 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகலாம்
குறிப்பாக, ராஸ் லஃப்பான் பகுதியில் உள்ள ஆலைகள் சேதமடைந்துள்ளதால், ஆண்டுக்கு 12.8 மில்லியன் டன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இதனை சீரமைக்க 3 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகலாம் என்பதால், சீனா, இந்தியா, தென் கொரியா போன்ற நாடுகளுக்கு எரிவாயு விநியோகிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
aதேசமயம் எல்பிஜி மற்றும் ஹீலியம் உற்பத்தியும் சரிந்துள்ளதால், சர்வதேச விநியோகச் சங்கிலியில் நீண்டகால பாதிப்புகள் ஏற்படும் என அஞ்சப்படுகிறது.
இஸ்ரேல் - ஈரான் மோதலில் தங்களுக்கு சம்பந்தமில்லை எனக் கூறியுள்ள கத்தார், உலக பொருளாதாரத்தின் முதுகெலும்பான எரிசக்தி நிலையங்களை தாக்குவதை தவிர்க்குமாறு உலக நாடுகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.