ரணிலுக்கு எதிரான விசாரணை இறுதிக் கட்டத்தில்
முன்னால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்தும் விசாரணை இறுதிக் கட்டத்தில் இருப்பதாக சட்ட மாஅதிபர் கோட்டை நீதிவான் நெத்தி குமாரவுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
சட்ட மாஅதிபர் சார்பாக நீதிமன்றத்தில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நடத்தப்படும் விசாரணை இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும், மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

இந்தக் கோரிக்கை நேற்று (19) அன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அத்துடன், செயலாளரின் சார்பாக பயணத் தடையைத் தளர்த்துவதற்கான கோரிக்கையை மீளப் பெறுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்திற்குத் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, பயணத் தடையைத் தளர்த்துவதற்கான கோரிக்கையை நீதிவான் நிராகரித்தார்.