முன்னாள் பிரபல அமைச்சர் ஒருவருக்கு எதிராக விசாரணை ; சிக்கபோகும் பிரபலம்
மேற்கு மாகாணத்தைச் சேர்ந்த முன்னாள் பிரபல அமைச்சர் ஒருவருக்கு எதிராக வாலான ஊழல் தடுப்பு பிரிவின் விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளது.
மோசடியான ஆவணங்களை பயன்படுத்தி, ரூ.120 மில்லியனுக்கும் மேற்பட்ட மதிப்புள்ள 6 ஜீப்புகளை சட்டவிரோதமாக ஒன்று சேர்த்து விற்பனை செய்ததாக, அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பங்காளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்
விசாரணைகளில், முன்னாள் அமைச்சரின் பங்காளிகள் மற்றும் மோட்டார் பதிவுத் துறையின் சில அதிகாரிகளின் உதவியுடன் பல ஆண்டுகளாக நடந்து வந்ததாக தெரியவந்துள்ள நிலையில் சில அதிகாரிகள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மற்றும் பங்காளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என வாலான ஊழல் தடுப்பு பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.
சமீபத்தில், போலி வேன் மற்றும் ஜீப்புடன் கைது செய்யப்பட்ட ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த மோசடியின் ஆழமான விவரங்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளன.
முன்னாள் அமைச்சரின் அரசியல் செல்வாக்கும், சில அரசு அதிகாரிகளின் ஆதரவும் இந்த மோசடியில் முக்கிய பங்கு வகித்துள்ளன என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த விவகாரம், நாட்டின் ஊழல் எதிர்ப்பு முயற்சிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக கருதப்படும் நிலையில் மேற்கு மாகாண அரசியல் சூழலிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.