படையெடுக்கும் தேள்கள்; 500 க்கும் மேற்பட்டோர் காயம்!
எகிப்தில் தேள் கொட்டியதில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 500 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
எகிப்தின் அஸ்வான் மாகாணத்தில் கடும் மழை பெய்து வருகின்றதால் அங்கு வீடுகள், வாகனங்கள் மற்றும் விவசாய பண்ணைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
இந்நிலையில் கடும் மழையையடுத்து தேள்கள், அவற்றின் வசிப்பிடங்களில் இருந்து வெளியேறி வீதிகளிலும் மக்களின் வீடுகளுக்குள்ளும் சென்று பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.
அதோடு தேள்கள் கொட்டியதில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 500 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் சுகாதார அமைச்சர் கலித் கபார் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேள்களின் நடமாட்டம் வீதிகளில் அதிகரித்துள்ளதால் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாமெனவும் அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.