ஈபிடிபி உறுப்பினரின் இடையூறு... வானத்தை நோக்கி சூடு நடத்திய பொலிஸார்
வலி. கிழக்கு பிரதேச சபையில் ஈபிடிபி உறுப்பினர் ஒருவர் கடைமைக்கு இடையூறு விளைவித்ததன் காரணமாக பொலிஸார் வானத்தை நோக்கி சூடு நடத்தி எச்சரித்தனர்.
இந்த சம்பவம் சற்று முன்பு ஊரெழு பகுதியில் இரவு 8 மணியளவில் இடம்பெற்றது. ஊரெழு பகுதியில் கடமையில் பொலிஸார் ஈடுபட்டிருந்தனர். அச்சமயத்தில் அங்கு வந்த இருவர் மோட்டார் வாகனத்தில் தலைக்கவசமின்றி ஆபத்தான முறையில் பயணத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அவர்களுக்கு தண்டனைப்பத்திரம் எழுத முற்பட்டபோது அங்கே வந்த பிரதேச சபை உறுப்பினர் பொலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பிரதேச சபை உறுப்பினரின் செயல் எல்லை மீறிச் போனதையடுத்தே போலீஸ் உத்தியோகத்தர் வானத்தை நோக்கி இரண்டு தடவை சூடு நடத்தி எச்சரித்தார்" என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் தன்னை ஈபிடிபி உறிப்பனர் என பலமுறை கூறி பொலிஸாருடன் முரண்பாட்டில் ஈடுபட்டார் எனவும் தெரிவித்தனர்.