சர்வதேச ரீதியில் ஜனாதிபதி ரணிலுக்கு ஏற்பட்டுள்ள நிலை!
நாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் (Ranil Wickremesinghe) அமுல்படுத்தப்பட்டுள்ள பயங்கரவாத சட்டம் தொடர்பில் சர்வதேச ரீதியாக கடும் அழுத்தம் எழுந்துள்ளது.
இந்த நிலையில், அண்மையில் கைது செய்யப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர்களான வசந்த முதலிகே, ஹஷான் ஜீவந்த மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை தடுத்து வைத்து விசாரிக்கும் கோரிக்கைக்கு ஜனாதிபதி உத்தரவு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவ்வாறான உத்தரவில் ஜனாதிபதி கையெழுத்திட்டால் அது இலங்கையின் கறுப்பு நாளாக அமைந்துவிடும் என மனித உரிமை பாதுகாவலர்கள் தொடர்பிலான ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் மேரி லோலர் வலியுறுத்தியுள்ளார்.
குறித்த மூவரையும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைப்பதற்கான உத்தரவில் கையொப்பமிட வேண்டாம் என அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.