அம்புலுவாவ கேபிள் கார் திட்டத்திற்கு இடைக்கால தடை
அம்புலுவாவ கேபிள் கார் வேலைத்திட்டத்தின் நிர்மாணப் பணிகளுக்கு இடையூறுகள் அல்லது தலையிடுவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி வரை நீடிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(29) உத்தரவிட்டுள்ளது.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் ராஜகிரியவில் அமைந்துள்ள எம்பர் எட்வென்ச்சர் தனியார் நிறுவனம் தாக்கல் செய்த ரிட் மனுவை மீள் பரிசீலனை செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இடையூறுகள் காரணமாக குறித்த திட்டத்தினை குறித்த காலத்துக்குள் முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதோடு, திட்டத்திற்கு இடையூறுகள் மற்றும் முறையற்ற தலையீடுகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு மனுதாரர் நீதிமன்றத்தில் கோரியுள்ளார்.
கம்பளை பிரதேச செயலாளர் தில்ருக்ஷி ஜயரத்ன, இலங்கை சுற்றுலா சபை மற்றும் முதலீட்டு சபை உள்ளிட்ட அதிகாரிகள் குழு இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.