வட்டியற்ற மாணவர் கடன்; கல்வி அமைச்சு வெளியிட்ட மகிழ்ச்சித்தகவல்!
வட்டியற்ற மாணவர் கடன் திட்டம் தொடர்பில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
வட்டியற்ற மாணவர் கடன் திட்டத்தின் 7ஆவது கட்டத்துக்காக விண்ணப்பிப்பதற்கு இம்மாதம் 4 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 7ஆம் திகதி வரை இக்கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தகவல்கள் இணையத்தளத்தில்
அதற்கமைய 2019/2020/2021 ஆம் ஆண்டுகளில் இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடத்தப்பட்ட கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றி அதில் சித்தியடைந்த மாணவர்கள் கடனுக்கு விண்ணப்பிக்க முடியும்.
இதற்கான விண்ணப்ப படிவத்தை www.studentloans.mohe.gov.lk என்ற இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது. அத்தோடு குறித்த கடன் தொடர்பான முழுமையான விபரங்களும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் 070-3555970/79 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து மேலதிக தகவல்களையும் பெற்றுக் கொள்ள முடியும் என்று கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.