சிறை அதிகாரியை தாக்கிய கைதிகள் ; உடந்தையாக இருந்த நான்கு அதிகாரிகள் கைது
பூஸா சிறைச்சாலையில் டிசம்பர் 7 ஆம் திகதி சிறைச்சாலை அதிகாரி மீது தாக்குதல் நடத்துவதற்கு இரண்டு கைதிகளுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் சிறைச்சாலை அதிகாரிகள் நால்வர் ரத்கம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலை அதிகாரி ஒருவருக்கும் இரண்டு கைதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பின்னர் தாக்குதலில் காயமடைந்த சிறைச்சாலை அதிகாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பில் ரத்கம பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சிறைச்சாலை அதிகாரி மீது தாக்குதல் நடத்துவதற்கு இரண்டு கைதிகளுக்கு உடந்தையாக இருந்த சிறைச்சாலை அதிகாரிகள் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சிறைச்சாலை அதிகாரிகளை காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.