தமிழர் பகுதி அரச நிறுவனத்தில் பாரிய மோசடி; அம்பலப்படுத்தும் காணொளி ஆதாரம்!
வவுனியா பாஸ்போர்ட் அலுவலகத்தில் காசுக்காக வரிசையில் நிற்கும் சிலரால் தூரதேசங்களில் இருந்து வரும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு வடக்கு பிரதேசங்களில் உள்ள மக்கள் பெரும்பாலானவர்கள் கடவுச்சீட்டுக்களை பெறுவதற்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில் அங்கு கடவுச்சீட்டு பெறுவதற்காக காசு வாங்கிக்கொண்டு சிலர் வரிசையில் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
அது தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுத்ததுடன், காசுக்காக வரிசையின்ல் நிற்பவர்கள் கைதான சம்பவங்களும் பதிவாகியிருந்தன.
கெட்ட வார்த்தை பிரயோகங்கள்
இந்நிலையில் இவ்வாறு காசுக்காக வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் அங்கு நின்றவர்களிடம் கெட்ட வார்த்தைகளை பேசி சண்டை பிடித்த நிலையில் பொலிஸார் குறித்த நபரை அங்கிருந்து அகற்றும் சம்பவம் தொடர்பிலான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தூரதேசங்களில் இருந்து கடவுச்சீட்டு பெறுவதற்காக வருவோர் இவ்வாறு காசுக்காக நிற்பவர்களால் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாக பாதிக்கப்பட்டோர் விசங்களை வெளியிட்டுள்ளனர்.