ஆசிரியர் சேவைக்கான போட்டிப்பரீட்சை வர்த்தமானியில் அநீதி ; சஜித் பிரேமதாச
தற்போதைய அரசாங்கத்தினால் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் வர்த்தமானி ஒன்றைக் கூட அச்சிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
ஆசிரியர் சேவைக்கான போட்டிப்பரீட்சைக்காக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில், 2025 ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்களே தகுதியுடையவர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

பாரிய அநீதி
இந்தத் தீர்மானத்தினால், அதற்குப் பின்னர் பட்டப்படிப்பை முடித்த பெருமளவான இளைஞர், யுவதிகளுக்குப் பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக சஜித் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆசிரியர் சேவை வர்த்தமானியில் உள்ள குறைபாடுகள் குறித்து இன்று விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ள அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார் .
2025 டிசம்பர் மாதம் வரை பட்டப்படிப்பை நிறைவு செய்த அனைவரும் ஆசிரியர் சேவைப் பரீட்சைக்குத் தோற்றக் கூடிய வகையில் இந்த வர்த்தமானி திருத்தப்பட வேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.