சடலமாக மீட்கப்பட்ட மாணவன் தொடர்பில் வெளியான பகீர் தகவல்
பொகவந்தலாவை- செல்வகந்தை தோட்டத்திலுள்ள கிணறு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட உயர்தர மாணவனின் உடலில் போதைப் பொருள் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத்தகவலை டிக்கோயா- கிளங்கன் வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி இனோக்கா ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மாணவனின் உடலில் அதிகளவிலான மாவா என்ற புகையிலை தூள் கலந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். சடலம் மீதான பிரேத பரிசோதனையின் போது, மாணவன், 12ஆம் திகதி அதிகாலையில் இருந்து எவ்வித உணவினையும் உட்கொண்டிருக்கவில்லை என்பதும் உறுதியாகியுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
பொகவந்தலாவ பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியைப் பார்வையிடுவதற்காக, மைதானத்துக்குச் சென்ற மாணவன், மறுநாள் 13ஆம் திகதி அதிகாலை மூன்று மணியளவில் வீடு திரும்பியுள்ளார்.
அதன் பின்னர் காலை 8 மணிக்கு நித்திரையில் இருந்து எழும்பிய அவர், தோட்டத்திலுள்ள கிணற்றுக்கு அருகில் சென்று அமர்ந்திருந்தவாறு மயக்கமடைந்த நிலையில் கினற்றில் விழுந்து உயிரிழந்திருக்கலாமென பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டுள்லனர்.