தப்பியோட முயன்ற மகிந்த குடும்பத்திற்கு இப்படி ஒரு சோதனை!
இலங்கையை விட்டு வெளியேறுவதற்காக மஹிந்த மற்றும் குடும்பத்தினர் தயாராக இருந்தனர்.
இந்நிலையில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்பத்தினர் பயணிக்கவிருந்த விமானம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட வேண்டியிருந்த பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
UL5001 என்ற விமானத்திலேயே அவர்கள் பயணிக்க தயாராகியிருந்த நிலையில் அந்த விமானம் இரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நேற்றையதினம் காலிமுக திடலில்அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட கோட்டா கோ ஹோம் கம போராட்டகாரகள் மீது இடம்பெற்ற தாக்குதலை அடுத்து பொதுமக்கள், ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களது வீடுகள் மற்றும் காரியாலயங்கள் என்பவற்றினை தீக்கிரையாக்கி வருகின்றனர்.
அந்தவகையில் முன்னாள் பிரதமர் மஹிந்தவின் இல்லம் நேற்றிரவு எரியூட்டப்பட்ட்து. இதனையடுத்து தப்பியோடிய மஹிந்த குடும்பம் திருகோணமலை கடற்படை முகாமில் பதுங்கியுள்ள நிலையிலேயே அவர்கள் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முயல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .