இலங்கை தொடர்பில் IMF வெளியிட்ட தகவல்!
இலங்கையுடனான நிதி மீட்புப் பேச்சுக்களை முடிந்தவரை விரைவாக முடிக்கமுடியும் என்று சர்வதேச நாணய நிதியம் நம்பிக்கை கொண்டிருப்பதாக அந்த நிதியத்தின் நிர்வாகப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா (Kristalina Georgieva) தெரிவித்துள்ளார்.
நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கையில் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்வதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
டோக்கியோவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய கிறிஸ்டலினா ஜோர்ஜீவா (Kristalina Georgieva) , இலங்கையில் உள்ள மக்களின் நல்வாழ்வில் தமது நிதியம் மிகவும் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளதாகவும் கூறினார்.
இலங்கை, எரிபொருள் உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளதாகவும் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா (Kristalina Georgieva) இதன்போது குறிப்பிட்டுள்ளார்.