வெளிநாட்டு பணியாளர்களுக்கான பிசிஆர் கட்டணம் குறித்து வெளியான தகவல்!
முழுமையாக தடுப்பூசி ஏற்றிக்கொண்ட வெளிநாட்டவர்கள் மற்றும் இலங்கையர்கள் நாடு திரும்பும் போது, பிசிஆர் பரிசோதனைகளை செய்துக்கொண்டு தனிமைப்படுத்தல் விடுதிகளுக்கு செல்லாமல் விமான நிலையத்திலிருந்து வெளியேற வசதி செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய, விமான நிலையத்தில் இன்று வியாழக்கிழமை திறக்கப்பட்ட ஆய்வுகூடத்தின் மூலம் பிசிஆர் பரிசோதனைகளை செய்துக்கொண்டு மூன்று மணித்தியாலங்களுக்குள் அதன்பெறுபேறுகளை பெற்று தனிமைப்படுத்தல் விடுதிகளுக்கு செல்லாமல் விமான நிலையத்திலிருந்து வெளியேற முடியுமென சுற்றுலாத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதற்கு கட்டணமாக விமான நிலையத்தில் 40 டொலர்கள் மாத்திரம் அறவிடப்படும். அத்தோடு , குறித்த கட்டணத்தை செலுத்த முடியாத மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கீழ் பதிவைப்பெற்றுள்ள வெளிநாட்டு பணியாளர்களுக்கான பிசிஆர் கட்டணத்தை குறித்த பணியகம் பொறுப்பேற்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் வெளிநாட்டில் இருந்து வருவோருக்காக விமான நிலையத்தில் குறுகிய காலத்தில் பெறுபேற்றை தரும் இந்த பிசிஆர் பரிசோதனைகள் எதிர்வரும் சனிக்கிழமை(25) முதல் முன்னெடுக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.