அலுவலகத்திற்கு செல்லும் பயணிகளுக்காக ரயில்வே திணைக்களம் விடுத்த தகவல்
40 அலுவலக ரயில் பயணங்களை இன்று (13) காலை நடத்த ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொழும்பு கோட்டைக்கு 15 காலை புகையிரத பயணங்களும், புத்தளம் மார்க்கத்தில் இருந்து கொழும்புக்கு காலை 04 புகையிரத பயணங்களும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
களனிவெளியில் இருந்து கொழும்பு கோட்டை வரை 4 புகையிரத பயணங்களும், கரையோரப் பாதையில் 17 புகையிரத பயணங்களும் நடத்தப்படும்.
ரயில்வே திணைக்களத்தின் அறிவிப்பு
அலுவலகத்திற்கு செல்லும் பயணிகளுக்காக தூர மாகாணங்களில் இருந்து கொழும்பு கோட்டைக்கு இரவு நேர அஞ்சல் ரயிலை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இன்றைய தினம் கலந்துரையாடி மேலதிக தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ரயில் இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
5 வருடங்களாக தாமதமாகியுள்ள தரமுயர்வை விரைவுப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.