கொழும்பின் கொடையாளர்களுக்கு வெளியான முக்கிய தகவல்
சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கும்போது பிரதேச செயலகங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்தந்த பிரதேச செயலகங்கள் மூலம் நன்கொடைகளை விநியோகிக்க ஏற்பாடு செய்யுமாறு கொழும்பு மாவட்ட செயலாளர் பிரசன்ன கினிகே கேட்டுக் கொண்டுள்ளார்.

நன்கொடையாளர்களின் பாதுகாப்பு
நன்கொடையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மட்டுமின்றி நேரடியாக உதவிகளை விநியோகிக்கும்போது ஆபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாலும், நன்கொடையாளர்களுக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் 397 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த 63,047 குடும்பங்களைச் சேர்ந்த 246,359 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அனர்த்தங்கள் காரணமாக மூன்று பேர் உயிரிழந்துடன், மேலும் இருவர் காணாமல் போயுள்ளனர். இதுவரை 6 வீடுகள் முழுமையாகவும், 1,187 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.
சுமார் 20,000 இற்கும் மேற்பட்டோர் தற்போது பாதுகாப்பு முகாம்களில் தங்கியுள்ளனர் என்றும் பிரசன்ன கினிகே மேலும் தெரிவித்தார்.