தாஜ் ஹோட்டல் தொடர்பில் இலங்கையை உலுக்கப்போகும் தகவல்!
புத்தாண்டிற்குப் பின்னர் ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற அமர்வில், ஈஸ்டர் தாக்குதல் குறித்து நாட்டு மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் வகையிலான தகவல் ஒன்றை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜே.வி.பியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க, அது குறித்து பல விடயங்களை அம்பலப்படுத்தப் போவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் தாஜ் ஹோட்டலில் தாக்குதல் நடத்த வந்த நபர், பின்னர் தாக்குதல் இடத்தை மாற்றியமை, ஈஸ்டர் தாக்குதலுக்கான பொறுப்பு கூறலை ஐ.எஸ் தீவிரவாத அமைப்பே ஏற்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்புக்கள் உள்ளிட்ட பல விடயங்களை அவர் சபையில் போட்டுடைக்கப்போவதாகவும் பத்திரிகை ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.