தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய தொடர்பில் தற்போது வெளியான தகவல்!
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு 14 நாட்களுக்கான குறுகிய கால விசா வழங்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
நாட்டில் ஏற்பட்ட மக்கள் போராட்டங்களை அடுத்து நாட்டைவிட்டு வெளியேறிய கோட்டாபய, மாலைதீவில்,தங்கியிருந்த நிலையில், அங்கிருந்து ஜுலை 14 ஆம் திகதி சிங்கப்பூரிற்கு சென்றிருந்தார்.
கோட்டாபய ராஜபக்ஸ விமானம் மூலம் நாட்டிற்குள் பிரவேசித்த சந்தர்ப்பத்தில் இந்த குறுகிய கால விசா வழங்கப்பட்டதாக இந்தியா ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
அதேவேளை சிங்கப்பூர் செல்லும் இலங்கையர்களுக்கு பொதுவாக 30 நாட்களுக்கு விசாவை நீடிக்க முடியுமெனவும் அதற்கு ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டியுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.